தொடக்கச் சலுகை · முதல் 3 website வாடிக்கையாளர்களுக்கு on-page SEO setup இலவசம். விதிமுறைகள்
சேவைகள் / தேடலில் உங்கள் தொழில் தெரியட்டும்

உங்களைத் தேடுபவர், உங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்கள் சேவை தேவைப்படும் ஒருவர் Google-ல் தேடும்போது, உங்கள் இணையதளம் தெளிவான பதிலாக இருக்க வேண்டும். அதற்கான தள அமைப்பு, உள்ளடக்கம், உள்ளூர் தேடல் வாய்ப்புகள் ஆகியவற்றை ஒன்றாகச் சரிசெய்கிறோம்.

இது உங்களுக்குப் பொருந்துமா?

இணையதளம் இருக்கிறது. ஆனால் சரியான வாடிக்கையாளர்கள் வருவதில்லை; வந்தவர்களும் விசாரிப்பதில்லை என்றால், அங்கிருந்தே தொடங்கலாம்.

இந்தச் சேவையைப் பேசலாம்
ஒப்புக்கொள்ளும் வேலைகள்

உங்களுக்காகச் செய்யும் பணிகள்.

01

தளத்தின் அடிப்படை ஆய்வு

தேடுபொறியால் பக்கங்களைப் படிக்க முடியுமா, முக்கியப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா, வேகத்தைத் தடுக்கும் சிக்கல்கள் உள்ளனவா என்று பார்க்கிறோம்.

02

தேடலுக்கேற்ற பக்கங்கள்

வாடிக்கையாளர் பயன்படுத்தும் தேடல் சொற்களைப் புரிந்துகொண்டு, சரியான பக்கத்துடன் இணைக்கிறோம். தலைப்புகள், சேவை விவரங்கள், உள் இணைப்புகளை மேம்படுத்துகிறோம்.

03

உள்ளூர் தேடல் வாய்ப்புகள்

நீங்கள் உண்மையில் சேவை வழங்கும் பகுதிகளுக்கான தகவல்களைத் தெளிவாக்குகிறோம். தகுதியுள்ள தொழில்களுக்கு Google Business Profile பணிகளையும் திட்டமிடலாம்.

04

பயனுள்ள கண்காணிப்பு

Search Console, தள வருகைகள், முக்கியப் பக்கங்கள், விசாரணைகள் ஆகியவற்றைப் பார்த்து அடுத்த பணிக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

அடுத்தது என்ன?

  1. 01இப்போது தளம் எங்கு நிற்கிறது என்பதை ஆராய்வோம்.
  2. 02முக்கியமான பக்கங்களையும் திருத்தங்களையும் தேர்வு செய்வோம்.
  3. 03மாற்றங்களை வெளியிட்டு, என்ன பயன் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

ஒன்றாகச் செயல்படும் சேவைகள்.

உங்கள் கேள்விகளுக்கு

பேசுவதற்கு முன், சில பதில்கள்.

நேராக எங்களிடம் கேளுங்கள்
SEO பலன் தெரிய எவ்வளவு காலமாகும்?

உங்கள் தளத்தின் தற்போதைய நிலை, போட்டி, செய்ய வேண்டிய பணிகள் ஆகியவற்றைப் பொறுத்தது. முதல் ஆய்வுக்குப் பிறகு நடைமுறைக்கு ஏற்ற காலக்கட்டத்தைப் பேசலாம். குறிப்பிட்ட நாளில் முதலிடம் என்று வாக்குறுதி கொடுப்பதில்லை.

தென் தமிழகத் தொழில்களுக்கும் SEO செய்வீர்களா?

ஆம். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட நீங்கள் சேவை வழங்கும் பகுதிகளையும் வாடிக்கையாளர் தேவைகளையும் வைத்து திட்டமிடலாம்.

Google-ல் முதலிடம் உறுதியா?

இல்லை. தரவரிசையை Google தீர்மானிக்கிறது. தளத்தின் தரம், பயனுள்ள உள்ளடக்கம், சரியான செயலாக்கம் ஆகியவற்றில்தான் எங்கள் கவனம்.

On-page ₹2,499 • Off-page ₹2,999/மாதம் • Full SEO ₹5,999/மாதம்

வேலை வரம்பும் கட்டணமும்

ஒரு திட்டம் மனதில் இருக்கிறதா?

உங்கள் தேவையைச் சொல்லுங்கள்